மாணவர்களுடன் தண்டால் எடுத்து வியப்பில் ஆழ்த்திய திருப்பூர் மாவட்ட ஆட்சியர்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள  அரசு மேல்நிலை பள்ளி மாணவர் விடுதியை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். 

அப்போது அங்கு வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள், ஆட்சியரை அவர்களுடன்  வாலிபால் விளையாட வருமாறு அழைத்தனர்.
இதையடுத்து மாணவர்கள் வற்புறுத்தலின் பேரில் ஆட்சியர் தலைமையில் ஒரு அணியும், மற்றொரு அணியும் மோதின. 

முன்னதாக மாணவர்களிடம் பேசிய ஆட்சியர், இப்போட்டியில் தோல்வியடைந்தால் 10 தண்டால் எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்தார். 

பின்னர்  விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையிலான அணி தோல்வியடைந்தது. இதையடுத்து ஆட்சியர் தனது அணி மாணவர்களுடன் சேர்ந்து 10 தண்டால் எடுத்தது அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur district collector surprised by taking push up with students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->