திருப்பூரில் கொடூர விபத்து! சுக்கு நூறாகிய 15 வாகனங்கள்! தாறுமாறாக ஓடிய லாரியால் துடிதுடித்து பலியான உயிர்!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் குமரன் சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் ஒருவர் பலியானார். 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று மதியம் விறகு ஏற்றிவந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகன ஓட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

மேலும், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், கார்கள் மீது மோதி, டிரான்ஸ்பார்மரில் முட்டி நின்றது.

இந்த கொடூர விபத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீதும் மோதியும் நிற்காத அந்த லாரி, ட்ரான்ஸ்பார்மர் மரத்தின் மோதி நின்றது.

இந்த விபத்தில் ஒருவர் லாரியின் அடியில் சிக்கிய வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து லாரி ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட தகவலின்படி, லாரியின் பிரேக் பழுதானதால் தாறுமாறாக ஓட்டியதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக திருப்பூர் குமரன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், விபத்து நடந்த இடத்திற்கு திருப்பூர் மேயர் தினேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur Lorry Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->