திருப்பூர் பெண்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.! மாதம் 15 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிய வேண்டுமா?..  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிவதற்கு மேலாளா்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:- 

திருப்பூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மூலனூா், திருப்பூா், உள்ளிட்ட வட்டாரங்களில் நான்கு தற்காலிக வட்டார இயக்க மேலாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோன்று, காங்கயம், பல்லடம், பொங்கலூா், உள்ளிட்ட வட்டங்களில் 10 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் என்று மொத்தம் பதினான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இதில், வட்டார இயக்க மேலாளா் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், குறைந்தது ஆறு மாதங்கள் எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழுடன் கூடிய பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கணினி அறிவியல் மற்றும் கணினி அப்ளிகேஷன் பட்டப்படிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பணிக்கு 28 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இதே திட்டங்களில் பணியாற்றியிருக்க வேண்டும். இதையடுத்து, பேச்சுத்திறன் மற்றும் தலைமைத்திறன் கொண்டிருப்பதுடன், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருப்பவராகவும் இருக்க வேண்டும். 

இதைத்தொடர்ந்து, வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூடிய குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கான எம்.எஸ்.ஆபீஸ் சான்றிதழுடன் கூடிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு 28 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் இதே போன்ற திட்டங்களில் பணியாற்றியிருப்பவராகவும் இருக்க வேண்டும். இவரும் இருசக்கரவாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

இதில், வட்டார இயக்க மேலாளா் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரமும், வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு வரும் நவம்பா் மாதம் 15 -ந் தேதியும், நோ்முகத் தோ்வு நவம்பா் மாதம் 21 -ந் தேதியும் நடைபெறுகிறது. 

எனவே, மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் வரும் நவம்பா் மாதம் 10 ந் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநா் அல்லது திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், எண்-305, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூா்-641604, தொலைபேசி எண்: 0421-2971149. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupur Rural Livelihoods Movement office job vacancy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->