திருவண்ணாமலை : பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு..!! - Seithipunal
Seithipunal



திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2024 - 2025ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது.

அந்தக் கூட்டத்தில், " காரீப் பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நடப்பு ஆண்டில் செயல்படுத்துவதற்கான அரசாணை பெறப் பட்டுள்ளதாகவும், இந்தக் காப்பீட்டுத் திட்டம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் மூலமாக செயல்படுத்தப் படவுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் நடப்பு ஆண்டு காரீப் பருவ பயிர்களான நெல், மணிலா, சாமை, மக்காச்சோளம், கம்பு ஆகியவற்றுக்கான பிரீமியம் தொகை மற்றும் செலுத்த வேண்டிய கடைசி தேதியும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி ஒரு ஏக்கர் நெல்லுக்கு பிரீமியம் தொகை ரூ. 690 எனவும், ஜூலை 15ம் தேதி கடைசி தேதி எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. 

மேலும் மணிலாவுக்கு ரூ. 590 பிரீமியம் தொகையாகவும், கடைசி நாளாக ஜூலை 31ம் தேதியும், மக்காச்சோளத்திற்கு ரூ. 436 மற்றும் கடைசி நாள் ஆகஸ்ட் 16ம் தேதி கடைசி நாளாகவும், 1 ஏக்கர் கம்புக்கு ரூ. 272 மற்றும் பிரீமியம் செலுத்த ஜூலை 31ம் தேதி கடைசி நாள் எனவும், சாமை 1 ஏக்கருக்கு ரூ. 190 எனவும், காப்பீடு செய்ய ஆகஸ்ட் 16ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. 

மேலும் குத்தகைதாரர், பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் இந்த காரீப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் காப்பீடு செய்ய ஆதார் அட்டை வங்கி கணக்குப் புத்தகம், சிட்டா, நடப்பாண்டில் பயிர் சாகுடி அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் தேசிய மயமாக்கப் பட்ட வங்கி கிளைகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் ஆகியவற்றை அணுகலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvannamalai Farmers Are Invited To Register Prime Minister Crop Insurance


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->