ஒரு அதிமுக MLA கூட இல்லாமல் இன்று சட்டப்பேரவை கூட்டம்! மொத்தமாக புறக்கணித்த அதிமுக!  - Seithipunal
Seithipunal


ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை இன்றைய கூட்டத்தை முழுமையாக அதிமுக புறக்கணித்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ஒருவர் கூட இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. 


தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இன்றைய கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஒருவர் கூட இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. 

மேலும், தமிழக சட்டப்பேரவை இன்றைய கூட்டத்தை முழுமையாக அதிமுக புறக்கணித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளை அதிமுக புறக்கணித்து உள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும், அதிமுக தரப்பில் இன்று தமிழக முழுவதும் கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல் இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்குபெற உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly 2024 ADMK DMK VCK kallasarayam issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->