சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு., அமைச்சர் கீதாஜீவன் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது சத்துணவு திட்டத்துக்கு உயிர்மை விளைபொருட்களை வழங்க அரசு ஆவன செய்யுமா? என்று சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளிக்கையில்,

"தமிழகத்தில் உள்ள 43,000 சத்துணவு மையங்களுக்கு கொண்ட கடலை மற்றும் சத்தான காய்கறிகள் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

10,000 சத்துணவு மையங்களில் இயற்கை முறையில் காய்கறிகள் பயிரிடப்பட்டு, பயன்படுத்தபடுகிறது. முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. 

சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியது போல், உயிர்மை விளைபொருட்களை வழங்கும் திட்டம் தற்போது இல்லை". என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

பின்னர், ஜவாஹிருல்லா சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு வழங்குவதற்கு அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் கீதாஜீவன் தேங்காய் துண்டு வழங்குவது பற்றி அரசு பரிசினை செய்யும் என்று பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn assembly Coconut slice in nutrition program


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->