அரசியல் பரபரப்புக்கு மத்தியில் 6 நாட்கள் லண்டன் செல்லும் அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


அரசியல் பரபரப்புக்கு மத்தியில் 6 நாட்கள் லண்டன் செல்லும் அண்ணாமலை.!!

தமிழகத்தின் பாஜக தலைவராக அண்ணாமலை உள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல், பல்வேறு பொது மேடைகளில் பாஜகவின் புகழை பாடுவதுடன், திமுகவை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார். 

ஒரு சில சமயத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவையும் விட்டுவைப்பதில்லை. இதற்கிடையே அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஒருபுறம் கட்சி நிர்வாகிகள் கூட்டமும், மறுபுறம் பாஜகவின் ஒன்பது ஆண்டுகால பொதுக்கூட்டம் என்றும் இருக்கும் பொழுது தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆறு நாள் லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் அங்கு வசிக்கும் தமிழர்களை சந்தித்து பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கட்சி பயணத்தில் அண்ணாமலையுடன் யாரெல்லாம் செல்லவுள்ளனர் என்ற தகவல் வெளியாகவில்லை. 

இதற்கு முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்று அங்கு,. Fellowship படிப்பு காரணங்களுக்காக  2 வாரம் தங்கியிருந்தார். அவருடன் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவும் சென்றிருந்தார். அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN bjp leader annamalai going to london for six days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->