கடலூரில் பரபரப்பு - பயிற்சியின் போது மயங்கி விழுந்த போட்டியாளர் உயிரிழப்பு.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் பிசிகோ பிட்னஸ் என்ற ஜிம் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

அந்தவகையில், போட்டியில் பங்குபெறுவதற்காக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் வந்திருந்தார். போட்டியில் கலந்துகொள்வதற்காக அனைத்து போட்டியாளர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது போட்டியாளர் ஹரிஹரன் பிரட் சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அவருக்கு விக்கல் ஏற்பட்டு, திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக போட்டியாளர்கள் விரைந்து சென்று போட்டி ஏற்பாட்டாளர்களிடம் தகவலைத் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு ஓடிவந்த அவர்கள்  ஹரிஹரனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவரகள் ஹரிஹரன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கப்பட்டதாவது, "ஹரிஹரன் போட்டியின் போது அளவுக்கதிகமான உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் உயிரிழந்தாரா? அல்லது உணவுக்கட்டுப்பாடுகள் காரணமாக உயிரிழந்தாரா?  என்பது தெரியவில்லை. 

இது குறித்த தகவல் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியும் என்று தெரிவித்துள்ளனர். போட்டியில் பங்கேற்பதற்காக வந்த சக போட்டியாளர் பயிற்சியின் போது திடீரென உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN body filter hari haran died in cuddalore competition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->