தமிழக சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை?!
TN Budget 2023 2024 tomorrow
நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்-யை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி மாதம், 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்ட இந்த பேரவை கூட்டம் சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது.
இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மூன்றாவது முறையாக (கடந்த 2021ல் ஆகஸ்ட் மாதம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி) நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்த தமிழக தமிழக அரசின் செய்திக்குறிப்பில், ''2023 மார்ச் 20ல் திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட்களை போலவே இந்த பட்ஜெட்-ம் காகிதமில்லாத (மின்னணு வடிவில், ‘இ-பட்ஜெட்’) பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்கிறார்.
நாளை மறுநாள் (21-ம் தேதி) வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பேரவைக் கூட்டம் நாடாக்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பட்ஜெட் தங்களுக்கு பின் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, பட்ஜெட் மீதான விவாதத்துக்காக பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்வார்கள்.
நாளைய பட்ஜெட் தாக்களில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளது.
English Summary
TN Budget 2023 2024 tomorrow