தமிழக முதல்வர் வெளியிட்ட அகவிலைப்படி உயர்வை வரவேற்க இயலவில்லை - தேசிய ஆசிரியர் சங்கம் போர்க்கொடி.! - Seithipunal
Seithipunal


தேசிய ஆசிரியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுதந்திர தின உரையில் 1-7-2022 முதல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு 3% உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளதை முழுவதும் வரவேற்க இயலவில்லை.

மத்திய அரசானது பணவீக்கம் மற்றும் விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையில் தனது ஊழியர்களுக்கு 1-1-2022 முதல் 34% அகவிலைப்படி வழங்கி வருகிறது அதற்கு முன் 1-7-2021 முதல் 31 % அகவிலைப்படியினை வழங்கி வந்தது ஆனால் தமிழக அரசோ 6 மாதம் காலம் தாழ்த்தி 1-1-2022 முதல் வழங்கிவிட்டு தற்போதைய அகவிலைப்படியினையும் 6 மாதம் காலம் தாழ்த்தி 1-7-2022வழங்குவது ஒரு புது நடைமுறை உருவாக வழிவகுக்கிறது என்பது மட்டுமன்றி மத்திய அரசுக்கு இணையானது என்பது உண்மைக்கு மாறானதும் ஆகும்.

ஆகவே தமிழக முதல்வர் உடனடியாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை 1-1-2022 முதல் வழங்க உத்தரவு இட வேண்டும் எனவும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு ஆகியவை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கேட்டுக்கொள்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm announce teachers sangam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->