தமிழக அமைச்சரவை கூடியது! முக்கிய திட்டத்திற்கு ஒப்புதல்! - Seithipunal
Seithipunal


2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதை முன்புரிந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியுள்ளது.  

இந்த பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் செய்யப்பட உள்ளது. அதனை முன்வைத்து, அமைச்சர்கள் தங்கள் துறைகள் சார்ந்த தேவைகளை ஆய்வு செய்து, முக்கிய அம்சங்களை பட்டியலிட்டுள்ளனர். இக்கூட்டத்தில், அவற்றை முன்வைத்து விவாதித்து, இறுதி தீர்மானங்களை எடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.  

2026 மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால், மக்கள் ஆதரவை ஈர்க்கும் திட்டங்கள் மற்றும் நலன்வாய்ந்த அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே, தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்குதல், தொழிற்சாலைகளின் விரிவாக்கம் உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் திட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.  

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், எதிர்வரும் நிதிநிலை அறிக்கையின் அடையாளமாக அமையக்கூடும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN CM MK STalin Cabinet meet


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->