3 பிரிவாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியம்! வெளியான அரசாணை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கும் தனி நிறுவனமாக பிரிக்க கடந்த  ஜனவரி 24ஆம் தேதி தமிழக அரசு அனுமதி வழங்கியது. 

இதனை தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு தனித்தனியான நிறுவனமாக பிரிக்க தமிழக அரசு அரசு இதழில் உத்தரவு வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம், தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் மேட்டூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையம் மற்றும் புதியதாக காட்டப்படும் உடன்குடி அனல் மின் நிலையம் போன்றவை தமிழ் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திற்கு மாற்றப்படுகிறது. 

அதேபோல் குந்தா மற்றும் கொல்லிமலை நீர்மின் நிலையம் அரசுக்கு சொந்தமான 41 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவனங்கள் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்திற்கு மாற்றப்படுகிறது. 

இந்த நிறுவனங்களை கடந்த நிதியாண்டு நிதி அறிக்கை படி சொத்துக்கள் மற்றும் கடன்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் இரண்டு நிறுவனங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN electricity board split 3


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->