அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது - தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
tn government announce no salry to protest government employees
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. இதனால், பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்கவும்" உத்தரவிட்டுள்ளது.
English Summary
tn government announce no salry to protest government employees