சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வருவார்....! என நம்பும் சுனிதா வில்லியம்ஸ் அண்ணி
Sunita Williams sister in law believes that Sunita Williams will come to India soon
கடந்த 9 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கத் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.மேலும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியது குறித்து அவரது குடும்பத்தார் அதாவது சுனிதா வில்லியம்ஸக்கு அண்ணி தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி ஒன்று அளித்தார்.

சுனிதா வில்லியம்ஸக்கு அண்ணி:
அப்போது அவர் கூறியதாவது, "அந்தத் தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது. எங்களிடம் அவர் எப்போது இந்தியா வருவார் என்ற தகவல் இல்லை. ஆனால் அவர் நிச்சயமாக விரைவில் இந்தியாவுக்கு வருவார் என நம்புகிறேன்.அவர் இந்தியா மற்றும் இந்தியர்களிடமிருந்து அன்பை உணர்கிறார்.
அவர் திரும்பி வருவார் என்பது எனக்குத் தெரியும். இது நேரம், அட்டவணை மற்றும் தளவாடங்களின் விஷயம்" என்று சுனிதா வில்லியம்ஸ் அண்ணி திருமதி ஃபல்குனி பாண்ட்யா தெரிவித்தார்.
சுனிதா வில்லியம்ஸ் வீடு திரும்பிய பிறகு, கோவிலில் இருந்து பேட்டியளித்த பாண்ட்யா, "எல்லாம் நன்றாக நடந்ததற்காகக் கடவுளுக்கு நன்றித் தெரிவித்ததாக," தெரிவித்தார்.
சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்தார் மட்டுமின்றி இந்தியர்கள்கூட சுனிதா வில்லியம்ஸ்ஸைக் காண ஆவலுடன் இருக்கின்றனர்.
English Summary
Sunita Williams sister in law believes that Sunita Williams will come to India soon