மின் கட்டண உயர்வு விவகாரம்.. தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்..!
TN Government flies caveat Petition
மின் கட்டண உயர்வு விஷயம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம், சில நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கும், கருத்து கேட்பு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம்தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து நூற்பாலை சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை அடுத்து, தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
TN Government flies caveat Petition