அடுத்து என்ன? ஆலோசனையில் இறங்கிய முதலமைச்சர்! ஒன்று கூடிய முக்கிய புள்ளிகள்! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய ஆளுநர் உத்தரவு குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவாரத்திலும், ஆளுநர் கடிதம் தொடர்பாகவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சற்று முன்பு சட்ட வல்லுநர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், என் ஆர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆளுநர் விவகாரத்தை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிகிறது.

மேலும், அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை ஆளுநர் நீக்கியது ஏன்? பின்னர் அதனை அவர் நிறுத்தி வைத்தது ஏன்? என்பது குறித்தும் விரிவாக முதலமைச்சர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதி உள்ள கடிதத்தில், உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துக்களை, செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து ஆளுநர் சுட்டிக்காட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளின் படி அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு தனக்கு அதிகாரம் உள்ளதாகவும் ஆளுநர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor letter and Senthilbalaji issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->