சனாதன விவகாரம் || உதயநிதி மீது வழக்கு? தமிழக ஆளுநரின் அதிரடி முடிவு! கலக்கத்தில் திமுக வட்டாரம்! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று காலை 4 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் தார்மீக அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என கூறிய கருத்து, பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேடல் குழு விவகாரத்தில் பல்கலைக்கழகம் மானிய குழு உறுப்பினர்கள் இடம் பெற்றதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளாராம்.

அதேபோன்று சனாதான தர்மம் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் உதயநிதி பேசியதற்கு அவர் மீது வழக்குத் தொடர சுப்பிரமணியன் சுவாமி மற்றும் பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக டெல்லியில் வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை டெல்லியில் தங்கி உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் திமுக தரப்பு கலக்கத்தில் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து நான் பேசவில்லை செய்தி ஊடகங்கள் தான் கேள்வி எழுப்புகின்றன என மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor RNRavi leaves for Delhi on 4 day visit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->