மகளிர் உரிமை தொகைக்கு மேல் முறையீடு செய்யலாம்.! தமிழக அரசு அறிவிப்பு!
TN govt published guidelines for appeals of Women's Rights Program
மகளிர் உரிமை தொகைக்கு மேல் முறையீடு செய்யலாம்.! தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. தற்போது, தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகையாக வழங்கிட தமிழக அரசால் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது
இந்த திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24/7/2023 முதல் 48 2023 வரை முதல் கட்டமாகவும் 5 8 2023 முதல் 14 8 2023 வரை இரண்டாவது கட்டமாகவும் மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்கு 18 8 2023 முதல் 20 8 2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்படும் திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்த 1.0065 கோடி மகளிர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும் தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18/9/2023 முதல் அனுப்பி வைக்கப்படும் இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராக செயல்படுவார் இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள் அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில் சம்பந்தப்பட்ட சமூக சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் வழி, கள ஆய்வு அறிக்கையினை பெற்று விசாரணை செய்வார் இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.
வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப் பெரும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராக செயல்படுவார் இணையதளம் வழியாக பெறப்படும் புகார்கள் மேல்முறையீட்டு மனுகளுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN govt published guidelines for appeals of Women's Rights Program