தமிழகத்தை புரட்டிபோடப்போகும் மழை!10 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!
Orange alert for 10 districts today
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுவடைந்து, தெற்கு இலங்கை மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இந்த மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை காரணமாக மக்களும் விவசாயிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Orange alert for 10 districts today