குறைந்த விலையில் தாக்க்களி, வெங்காயம் விற்பனை - தமிழக அரசு அசத்தல் முடிவு.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த கடந்த வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.80 வரையும், மற்ற இடங்களில் ரூ. 90 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளியைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில்,  தமிழக அரசு பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனையை தொடங்கியிருக்கிறது. அதாவது, சந்தைகளில் விலை சற்று உயர்ந்ததையடுத்து பொதுமக்களின் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளியை இறக்குமதி செய்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி மகாராஷ்டிரா நாசிக்கில் இருந்து கொண்டு வரப்பட்டு தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. அந்த வகையில், பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt sales tomatto and onion loest price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->