சுட்டெரிக்கும் வெயில்.. இனி வழக்கறிஞர்கள் "கருப்பு கவுன்" அணிய தேவையில்லை..!! ஆனால் ஒரு நிபந்தனை..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அனைவரும் கருப்பு, வெள்ளை உடை மேல் கருப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கவுன் ஆகியவற்றை அணிந்து ஆஜராக வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. கோடை வெயில் தாக்கம் அதிகம் உள்ள மார்ச் முதல் ஜூலை வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை பார் அசோசியேசன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

வழக்கறிஞர்களின் இந்த கோரிக்கை தொடர்பாக அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் முன் வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் "ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை கருப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. 

அதேசமயம் கருப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம்" என அந்த அறிவிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn Lawyers donot need wear black gowns in summer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->