#BREAKING || தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.! சற்றுமுன் வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் கடந்த 3 வாரங்களாக சுனாமி போல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

கடந்த ஜனவரி மாதம் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி தமிழகத்தில் நோய் தொற்று பாதிப்பு 1489 ஆக இருந்த நிலையில், தற்போது இன்று 30 ஆயிரத்து 55 ஆக ஒருநாள் கொரோனா பாதிப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் இன்று ஒரு நாள் ஒரு நாளில் 6240 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இது மட்டும் இல்லாமல் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வருகின்ற ஜனவரி 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ளதால், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இரவு நேர ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அல்லது ரத்து செய்வது குறித்து வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN LOCKDOWN FOR OMICRON FEB


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->