ஹிந்தி புரியவில்லை! காவிரியில் தடையின்றி தண்ணீர் வருகிறது - அமைச்சர் துரைமுருகன் பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தலைநகர் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 

மேகதாது அணை விவகாரம், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரியில் கர்நாடகா தண்ணீர் தர மறுக்கும் விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் என்று ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது,

"மத்திய அமைச்சர் இந்தியில் பேசியதால், அவர் பேசியது எதுவும் எங்களுக்கு புரியவில்லை.

கர்நாடகாவில் இருந்து தற்போதைய சூழலில் தடையின்றி தண்ணீர் வருகிறது.

புதிய அமைச்சரவை பதவியேற்றபின், துறை சார்ந்த அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சந்திப்பு நடந்தது.

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம்.

முல்லைப் பெரியாறு பராமரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தோம்" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN minister DuraiMurugan say about central minister meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->