பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை: சென்னை காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட்!
TN Police Harassment
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக பெண் காவலர் ஒருவர் பாலியல் தொல்லை புகார் அளித்ததை அடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், பெண் காவலரின் புகாரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, விரைவான விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், மகேஷ்குமார் மீதான புகாரை விசாரிப்பதற்காக டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாகா குழு, புகாரை முழுமையாக ஆய்வு செய்து, உண்மை நிலையை உறுதி செய்யும்.
விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு மகேஷ்குமார் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையில் பணியாற்றுபவர்கள் ஒழுங்கு மற்றும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் எந்த விதமான தளர்வும் அனுமதிக்கப்படாது என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.