கஞ்சா, போதை மாத்திரை! துணை நடிகர்கள், பாஜக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் கைது! - Seithipunal
Seithipunal


கோவையில் கஞ்சா போதை மாத்திரைகளுடன் மூன்று துணை நடிகர்கள் உட்பட பேரும், சென்னையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட மூன்று பேரும் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை தடுக்கும் வகையில், தமிழக அரசு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை பயன்படுத்திய எட்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இன்று காலை கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று துணை நடிகர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த துணை நடிகர்களான யாஷிக் இலாகி, மரியா, சினேகா ஆகிய மூன்று பேர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதே போல் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குணசேகரன், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் இன்று காலை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 கிலோ கஞ்சா மற்றும் எடை போடும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் குணசேகரன், விஜய், ரகு ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Police Narcotics arrest bjp gunasekaran and cine sub actress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->