துப்பாக்கியால் சுட்டு பிடிக்க உத்தரவு? தமிழகத்தில் இனி அதிரடி! பரபரப்பு தகவல்!
TN Police Gun Fire Law and Order
தமிழகத்தில் கொலை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடுமையான குற்றசாட்டுகளை எதிர்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
அண்மையில் நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர்உசேன், நிலத்தகராறில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சட்டசபையில் எதிரொலித்தது. இதுகுறித்த தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; சட்டத்தின் பிடியில் யாரும் தப்ப முடியாது என்று உறுதியளித்தார்.
ஆனால், நேற்றைய தினம் சென்னை அயனாவரத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பியின் உதவியாளர் குமார், நிலப்பிரச்சனை தொடர்பாக கடத்தி கொலை, சேலத்தில் ரவுடி பட்டப்பகலில் காரில் வைத்து மனைவி கண் முன்னே வெட்டிக் கொலை, சென்னையில் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை, பல்வேறு பகுதிகளில் எறிந்த நிலையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு என்று தமிழகம் ரத்த கலவெறிக்காலமாக மாரி இருந்தது.
இந்த சம்பவங்களில் போலீசார் குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டும் பிடித்துள்ளனர். திடீரென போலீசார் துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பின்னல் ஒரு உத்தரவு உள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, குற்றச்செயல்களை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், தேவைப்பட்டால் துப்பாக்கி சூடும் நடத்தலாம் என தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மாநிலம் முழுவதும் போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக நிலப்பிரச்சனைகள் தொடர்பாக அளிக்கப்படும் புகார்களை உடனடியாக விசாரணை செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், தலைமறைவாக உள்ள முக்கிய ரவுடிகளை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், ரவுடிகளுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் மாநிலம் முழுவதும் போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று வெளியான அந்த செய்தி தெரிவிக்கின்றது.
English Summary
TN Police Gun Fire Law and Order