3 பேருக்கு தலா 10000 பரிசு - அசத்திய தமிழக போக்குவரத்து துறை.! - Seithipunal
Seithipunal


பொதுமக்கள் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு மாதமும் மூன்று பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.10,000 பரிசு வழங்க தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டமிட்டிருந்தது. 

இந்த திட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறை படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பின் படி கடந்த மாதம் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் முன்பதிவு செய்து பயணித்தவர்களில் மூன்று பேரை போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.சிவசங்கர் கணினி குலுக்கல் முறையில் இன்று தேர்வு செய்தார்.

அந்த வகையில், இசக்கி முருகன் (பயணசீட்டு எண்: T50959052) , சீதா (பயணசீட்டு எண்: T51210787), இம்தியாஸ் ஆரிப் (பயணசீட்டு எண்: T51655633) உள்ளிட்ட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு விரைவில் ரூ.10,000 வழங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn transport department 10000 gift to three passanger


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->