தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' என்று அழைக்கப்படும் நெல்லை கண்ணன்( வயது 77). தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். 

காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள் பணியாற்றிய இவர் கடந்த 1970-ம் ஆண்டு முதல் மேடைகளில் பேசி வந்தார். குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர் நெல்லை கண்ணன். 

இவர் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதினை சமீபத்தில் பெற்றிருந்தார். 77 வயது நிரம்பிய இவர் வயது முதிர்வின் காரணமாகவும், நோய் தாக்கத்தின் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வந்த நெல்லை கண்ணன் தனது வீட்டில் இன்று உயிரிழந்தார். 

அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், நெல்லை கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல பேச்சாளரும் தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களுடன் பழகியவருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவால் வருத்தம் அடைந்தேன். நெல்லை கண்ணனின் தமிழ்ப்பங்களிப்பை போற்றும் வகையில் கடந்த ஆண்டு அரசு சார்பில் இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது. விசிக சார்பில் கடந்த ஆண்டு வழங்கிய காமராஜர் கதிர் விருது பெற்றபோது மேடையில் அன்பு பாராட்டினார் நெல்லை கண்ணன். நெல்லை கண்ணை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், தமிழுலகினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNadu CM MK Stalin's condolence on the death of Tamil poet Nellai Kannan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->