பத்திரப்பதிவு செய்ய போறீங்களா? அக்.1 முதல் புதிய நிபந்தனை அமல்! முழு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துக்கள் குறித்தான ஆவணமாக அந்த சொத்தின் சமீபத்திய புகைப்படத்தை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "பதிவுத்துறையில் போலியான ஆவணங்கள் பதிவிடுவதை தடுக்கவும் விடுதலின்றி அரசுக்கு வருமானம் வருவதை உறுதி செய்யவும் பல்வேறு சீர்திருத்தம் நடக்கடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டிடங்கள் இருப்பதை மறைத்து காலி மனையிடங்கள் என்று ஆவணங்கள் பதியப்படுவதால் அரசுக்கு வரும் வருவாய் பெருமாளின் பாதிக்கப்படுகிறது. எனவே காலி மனையிடங்களை ஜியோ கோ.ஆர்டினேட்ஸோடு (புவியியல் ஆயங்கள்) புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என கடந்த வாரத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. பதியப்படும் ஆவணத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து அதனை ஆவணமாக சேர்த்து மோசடி பதிவு செய்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.

எனவே இது குறித்து தீவிரமாக ஆராய்ந்து அரசு புதியதோர் முடிவினை எடுத்துள்ளது அதன்படி சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துக்கள் குறித்து புகைப்படம் ஜியோ கோக்.ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு அதனை ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவு துறை தலைவர்களால் தனியே வழங்கப்படும். இந்த நடைமுறையானது எதிர்வரும் அக்டோபர் முதல் தேதி முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும்" என வணிகவரி மற்றும் பத்திர பதிவு துறை செயலாளர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tngovt announced land photo mandatory from oct1 for deed registration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->