மீண்டும் ஏமாற்றிய தமிழக அரசு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பால் குமுறும் பகுதி நேர ஆசிரியர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி, கம்ப்யூட்டர், தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகியப் பாடப்பிரிவுகளை கற்பிப்பதற்குப் பகுதி நேர ஆசிரியர்கள் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டனர். வாரத்தில் 3 அரை நாட்கள் பணி என்ற விதியின் அடிப்படையில் மாதம் ரூ.5000 தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு 15,169 பேர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 12,000 பேர் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், வயது முதிர்வு, வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை உள்ளிட்டவைகள் காரணமாக இறந்தவர்கள் உட்பட சுமார் 3,000 பேர் தற்போது பணியில் இல்லை.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மே மாத பள்ளி விடுமுறை நாட்களில் இவர்களுக்கு ஊதியம் இல்லை என்பதால் மே மாதத்தில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய இவர்களை நேரில் சந்தித்த தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் "திமுக ஆட்சி அமைந்த உடன் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்" என உறுதி அளித்தார். மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் ஆட்சி அமைந்த உடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது வரை ஒரு பகுதி நேர ஆசிரியர்கள் கூட பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் மு.க ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நம்பி ஏமாந்த பகுதி நேர ஆசிரியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நடப்பாண்டும் தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜூன் மாதம் நல்லதொரு அறிவிப்பு வெளியாகும் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதால் பகுதி நேர ஆசிரியர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர்களாக ஓர் ஆண்டில் 11 மாதம் பணியாற்றி விட்டு ஒரு மாதம் எங்கு சென்று ஊதியம் பெறுவது என ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt announced parttime teachers will not be paid in May


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->