தமிழக அரசுக்கு ₹79,772 கோடி வருவாய் - வெளியான அறிக்கை! - Seithipunal
Seithipunal


வணிகவரித் துறையில் நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் (அக்டோபர் வரை) ₹79,772 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று (11.11.2024) 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வணிகவரித் துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) ரூ.70543 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) ரூ.79772 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.9229 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி இந்திய அளவில் 11.59 சதவிகிதம் எனவும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் வளர்ச்சி 19.39 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசுகையில், இணை ஆணையர்கள் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி வணிகவரித் துறையின் வருவாயை மேலும் கூட்டுவதற்கு உள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அவற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆக்கபூர்வமாக செயலாற்றிட வேண்டுமென்றும் அறிவுறித்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Commercial Tax 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->