பத்திரப்பதிவு வீடியோவை வாட்ஸ் அப் மூலம் வழங்க பதிவுத்துறை முடிவு..!!
Tngovt decided to provide deed registration video through WhatsApp
தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில் கடந்த 2013 முதல் பத்திர பதிவு நிகழ்வுகளை சிடி மூலம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக பயனாளர்களிடமிருந்து 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் சிடிக்கு பதிலாக டி.வி.டியில் வீடியோ பதிவு செய்து வழங்கும் திட்டம் கடந்த 2020ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதற்கு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள பதிவுத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தற்பொழுது பத்திரப்பதிவு நிகழ்வுகளை விண்ணப்பதாரரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பும் திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக சென்னை மண்டலத்தில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Tngovt decided to provide deed registration video through WhatsApp