3 மாதத்தில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படும்! நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு ஏற்றவாறு தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழகத்தில் 12 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் உள்ள ஆட்டோ கட்டணங்களையும் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்தார். தமிழக அரசின் விளக்கத்தையும் உத்திரவாதத்தையும் ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்த வழக்கினை முடித்து வைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt has assured auto fares will be revised in 12 weeks


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->