யாருக்கெல்லாம் ரூ.6,000 நிவாரணத்தொகை - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை ரூபாய் 6000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மிக்ஜாம் புயலால் பாதிப்புக்கு உள்ளான 4 மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைப்படி 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய வட்டங்களுக்கும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய 6 வட்டங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த நிவாரணத்துவையானது நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி வழங்கப்படும் எனவும்ஷகுறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதில் எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில் கூட்டுறவு சங்க பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலான் இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் காவல் துறையுடன் இணைந்து தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணையில் அறிவுறுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt issued GO for Chennai floods relief


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->