அங்கன்வாடி ஓய்வூதியதாரர்கள் கருப்பு உடை அணிந்து உண்ணாவிரத போராட்டம்...!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி இன்று ஒரு நாள் கருப்பு உடை அணிந்து அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க தலைவர் நாராயணன், பொதுச் செயலாளர் மாயமலை ஆகியோர் தலைமையில் 35 மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியதாரர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கன்வாடி ஓய்வூதியதாரர்களின் 7 அம்ச கோரிக்கையான தமிழக அரசிடம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7,850 ஆக உயர்த்துதல், அகவிலைப்படி உயர்த்துதல், குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், மருத்துவ படி 300 ரூபாயாக உயர்த்துதல், மருத்துவ காப்பீடு திட்டம், ஈமக்கிரியைச் செலவு நிதியை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துதல் மற்றும் ஓய்வு பெறும் நாள் அன்று GPS, SPF, lump sum ஆகியவற்றை வழங்க வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tngovt pensioners wear black and hunger protest in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->