ஜன.1 முதல் நியாய விலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரசி வினியோகம் தொடக்கம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இரும்பு சத்து நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு இரும்பு சத்து குறைபாடு உள்ளதால் ரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் உள்ளனர்.

தற்பொழுது நியாய விலை கடைகளில் வழங்கப்படும் புழுங்கல், பச்சரிசியில் மாவுச்சத்துகள், புரதச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. எனவே இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு இரும்பு சத்து கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து மிக்க செரிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

நெல்லை அரிசியாக மாற்றும் பொழுது இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் கொண்ட கலவையை சேர்த்து அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. 100 கிலோ சாதாரண அரிசிக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படும் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சோதனை முறையில் கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு திருச்சியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் விருதுநகர், ராமநாதபுரத்திலும் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு செரிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அந்தியோதயா அட்டைதாரர்களுக்கும் சரி ஊட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதற்காக சுமார் 256 கோடி ரூபாய் செலவில் 31 லட்சம் கிலோ ஊட்டச்சத்து கலவை தயாரிக்கப்பட்டு ரேஷன் அரிசிகளுடன் கலக்கும் பணியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt wiil be distributing enriched rice via ration shop


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->