ஆருத்ரா மோசடி வழக்கில் 5 பேர் தலை மறைவு.."தகவல் அளித்தால் சன்மானம்" பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு..!!
Tnpolice announced reward for info about culprits in Arudhra case
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு..!!
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் என்ற நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 13 கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் 2500 கோடி ரூபாய் முறைகேடு செய்தது அம்பலமானது.
ஆருத்ரா நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேரிடமிருந்து முதலீடாக கிட்டத்தட்ட 2,438 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 16 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ராஜசேகர், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உஷா, தீபக், கோவிந்த பிரசாத், நாராயணி, ரூபேஷ் குமார் ஆகிய 5 பேர் தலைமறைவாக இருப்பதாகவும். இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும் ஆருத்ரா நிறுவன குற்றவாளிகள் தலைமறைவு குறித்து தகவல் அளிக்க பிரத்தேகம் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், காவல் பயிற்சி கல்லூரி, அசோக் நகர் சென்னை- 83 மற்றும் தொலைபேசி எண் 044-2250 4311 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tnpolice announced reward for info about culprits in Arudhra case