சீசிங் ராஜா என்கவுண்டரில் அதிரடி திருப்பம்! போலீஸ் தரப்பில் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


"சீசிங் ராஜாவுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என தெரியவந்துள்ளது" என்று, சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சீசிங் ராஜஸவை போலீசார் ஆந்திராவில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். 

இன்று காலை, நீலாங்கரையை அடுத்த அக்கறை பகுதியில் சீசிங் ராஜ் மறைத்து வைத்த ஆயுதங்களை எடுப்பதற்காக அவரை போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படும் நிலையில், அவர் அங்கிருந்த கள்ள துப்பாக்கி மூலம் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதனையடுத்து ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தற்பாதுகாப்புக்காக திருப்பி சுட்டதில் அவர் சமத்துவ இடத்திலேயே பலியானதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த என்கவுண்டர் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவிக்கையில், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இல்லை.

சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39 வழக்குகள் உள்ளன. 10 வழக்குகளில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தார். 

முக்கியமாக வேளச்சேரி பாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் தான் சீசிங் ராஜாவை கைது செய்ய தேடி வந்தோம். அப்போது, போலீசை நோக்கி சுட முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார் என்று, சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPolice Armstrong case Seizing Raja Encounter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->