அதெல்லாம் செல்லாது.."நேரில் ஆஜராகுங்க".. ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே சுரேஷுக்கு நெருக்கடி..!! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 13 கிளைகளை தொடங்கி பொதுமக்களிடமிருந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேரிடம் இருந்து கிட்டத்தட்ட 2,438 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் 16 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் 11 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவனாக ராஜசேகர், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உஷா, தீபக், கோவிந்த பிரசாத், நாராயணி, ரூபேஷ் குமார் ஆகிய 5 பேர் தலைமறைவாக இருப்பதாக நேற்று அறிவித்ததோடு, அவர்கள் குதித்து தகவல் அளித்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையே இந்த வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்தது

இந்த வழக்கில் ஏற்கனவே கைதான நடிகர் ரூசோ அளித்த தகவலின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கின் விசாரணையில் இருந்து தப்பிக்க ஆர்.கே.சுரேஷ் கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது.

ஆருத்ரா நிறுவனம் பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு தொடரில் இருப்பதை போலீசார் உறுதி செய்ததை அடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருடைய வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்.கே சுரேஷ் சார்பாக அவருடைய வழக்கறிஞர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு விளக்கம் அளித்து இருந்தார்.

அதனை ஏற்க மறுத்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆர்.கே சுரேஷ் தரப்பு வழக்கறிஞரின் விளக்கத்தை நிராகரித்ததோடு தலைமறைவாக உள்ள ஆர்.கே சுரேஷ் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளனர். இதனால் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே சுரேஷ் நேரில் ஆஜராக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TnPolice orders again RK Suresh to appear in Arudhra fraud case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->