குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? - டி.என்.பி.எஸ்.சி அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நடந்தது.

இந்தத் தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த ஜூன் 9-ம் தேதி மாநிலம் முழுவதும் 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 

சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் காத்திருந்தனர். 

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc announce group 4 exam result date


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->