அரசு பேருந்தில் ₹2,000 நோட்டு வாங்க வேண்டாம்.. அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மண்டலத்திற்குட்பட்ட மத்திய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் "இந்திய ரிசர்வ் வங்கி 19.05 2023 தேசிய அறிக்கையில் ரூபாய் 2000 இந்திய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறும் முடிவை அறிவித்துள்ளது. 

இருப்பினும் ரூ.2000 இந்திய ரூபாய் நோட்டுகள் சட்டபூர்வமான டெண்டராக இருக்கும், மேலும் 30 செப்டம்பர் 2023 தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000 வரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலையில் உள்ளதால் 23.05.2023 ஆம் தேதி முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட வண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும் வழி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்கும் படி தகுந்த அறிவுரை வழங்குமாறு பொது மேலாளர் மற்றும் அனைத்து கிளை மேலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தினசரி ஒவ்வொரு கிளையிலும் நடத்துனர்களால் செலுத்தப்பட்ட வசூல் தொகையில் 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறித்து விவரங்கள் மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது" என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNSTC order Do not buy ₹2000 notes in govt buses


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->