தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்.. நாகை மீனவர்கள் 10 பேர் இன்று இலங்கை கடற்படையால் கைது..!! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கையின் கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து கொண்டு செல்வதும், மேலும் அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது என்று தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக கடந்த ஜூன் 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும், அவர்கள் சென்ற 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து காங்கேசன் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.

அவர்களை விரைவில் பத்திரமாக மீட்டுத் தருமாறு கோரி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை தங்கள் எல்லையில் வந்து மீன் பிடித்ததாக கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் தான் கைதான 10 மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதிர்ச்சியில் இருந்து மீளாத மீனவர்கள் அதற்குள் மீண்டும் 10 நாகை மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதால் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாக பெரும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today 10 Nagapattinam Fishermens Arrested By Srilankan Navy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->