தமிழகத்தில் "வெயில் சுட்டெரிக்கும்"... வானிலை மையம் அலெர்ட்...!
Today and tomorrow days temperature increase in tamilnadu
தமிழகத்தில் "கத்திரி வெயில்" காரணமாக பல இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் நேற்று 9 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். மேலும் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
English Summary
Today and tomorrow days temperature increase in tamilnadu