சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அதிமுகவின் மேல்முறையீட்டு மனு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும் அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

சபாநாயகரின் இந்த பேச்சு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவருக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் அப்பாவு தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 25-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில் சபாநாயகரின் பேச்சு தொடர்பாக கட்சி சார்பில் எந்த புகாரும் தாக்கல் செய்யப்படவில்லை. தனிப்பட்ட முறையில் புகார்தாரர் அவதூறு வழக்கை தாக்கல் செய்து உள்ளதாகவும் வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை எனவும் கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

உயர்நீர்திமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகவும், இடைக்கால தடை விதிக்க கோரியும் பாபு முருகவேல் சார்பில் வழக்கறிஞர் ராஜேஷ் சிங் சவுகான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing admk case against assembly speaker appavu in supreme court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->