இன்று தை அமாவாசை..நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்!
Today is Thai Amavasya. People throng water bodies to offer prayers to ancestors
தமிழகம் முழுவதும் இன்று தை அமாவாசையை யொட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, மற்றும் தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களை நினைத்து வழிபாடுமற்றும் தர்ப்பணம்,செய்வது மிகவும் விசேஷம் என்கின்றனர்.மேலும் அந்த நாட்களில் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகம் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த மகாளய அமாவாசை நாட்களில் ராமேஸ்வரம் ,கன்னியாகுமரி.திருச்சி காவிரி ஆறு, ஒகேனக்கல் போன்ற நீர் நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இதைத்தொடர்ந்து இன்று தை மகாளய அமாவாசையான முன்னிட்டு ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் பொதுமக்கள் புனித நீராடினர்.அதேபோல ராமேஸ்வரம் ,கன்னியாகுமரி.திருச்சி காவிரி ஆறு,போன்ற நீர் நிலைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய் பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்
திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் இன்று ஒகேனக்கல்லில் ஏரளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இதன் காரணமாக ஒகேனக்கல்லில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபோன்று இன்று தை அமாவாசையையொட்டி போச்சம்பள்ளி அடுத்த மஞ்சமேடு தென்பாணை ஆற்றங்கரையில் மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பொதுமக்கள் இறந்த தங்களின் முன்னோர்களுக்கு வாழை இலையில் பச்சரிசி காய்கறி அகத்திக்கீரை, வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்து திதி கொடுத்து தர்ப்பணம் செய்து, முன்னோர்களை வழிபட்டனர்.
English Summary
Today is Thai Amavasya. People throng water bodies to offer prayers to ancestors