அதிரடியாக குறைந்த தக்காளி விலை.. கிலோவுக்கு 30 ரூபாய் குறைவு.!
Today tomoto and onion price price decrease
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. அதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது.
அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை கடந்த 2 வாரத்திற்கு மேலாக 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளியின் விலை 120 முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தக்காளியின் விலை கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்து 90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் வரத்து அதிகரிப்பதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்று தக்காளியை தொடர்ந்து சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 50 ரூபாய் அதிகரித்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிலோவுக்கு சாம்பார் வெங்காயத்தின் விலை 30 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
Today tomoto and onion price price decrease