இன்று நாம் தமிழர் கட்சி ஆலோசனை.. புதுவையில் சீமான்..!
Today we are in consultation with the Tamil Party Seeman in New Delhi
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் இன்று நடைபெறுகின்றது.அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் இன்று நடைபெறுகின்றது.அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்தநிலையில் புதுச்சேரி நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்:திராவிட அரசியலுக்கு எதிராக தமிழ்த்தேசிய அரசியல் கருத்தியல் வலிமைபெற்று வரும் சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுடைய தமிழ்த்தேசிய அரசியலை எதிர் கொள்ள இயலாமல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை சந்திக்கும் போராட்டத்தினை அறிவிக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாடு ஏற்புடையதல்ல .
மக்களாட்சிபாதையில் தடம் மாறா தமிழ்த்தேசிய அரசியல் கருத்தியலை சமரசமில்லாமல் போராடும் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த்தேசிய அரசியலின் ஒற்றை நம்பிக்கை சீமான் அவர்களை பாதுகாப்போம் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் அரண்அமைப்போம்தமிழ்த்தேசிய அரசியலா-திராவிட அரசியலா கருத்தியல் மோதல் வலிமைப்பெறட்டும்நாம் தமிழராய் நாம் ஒன்றிணைவோம் நம் வலிமையை உணர்த்திடுவோம் என நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெவித்துள்ளது.
English Summary
Today we are in consultation with the Tamil Party Seeman in New Delhi