விடாது விரட்டும் செந்தில் பாலாஜி - 2-வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் வழக்கு நாளை விசாரணை.!
tomarrow hearing of senthil balaji bail case
தமிழகத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு, கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என்றுக் கூறி ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திருப்பி வாங்குமாறு அறிவுறுத்தியது.
இதனையடுத்து 3வது முறையாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
English Summary
tomarrow hearing of senthil balaji bail case