விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு.! "நாட்டுக்கோழி வளர்ப்பு" பயிற்சி முகாம்..! முழு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், விவசாயிகளுக்கான நாட்டுக் கோழி வளா்ப்பு இலவச பயிற்சி முகாம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு.. 0421-2248524 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow poultry training camp in Tiruppur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->