மேகமலையில் திடீர் வெள்ளப்பெருக்கு - பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்.!
touristers evacuated in megamalai for flood
தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை அருவிக்கு தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், வார விடுமுறை என்பதால் நேற்று காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் திடீரென கன மழை பெய்ததால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதைக் கண்காணித்த வனத்துறையினர் உடனடியாக அருவி பகுதிக்கு சென்று அங்கு குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அவசர அவசரமாக வெளியேற்றினர். தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் அருவி பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர். இந்த திடீர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
English Summary
touristers evacuated in megamalai for flood